ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டாலே பல்வேறு நோய்களுக்கு மருந்து

      வாசனைப் பொருட்களின் மகாராணி என்று வர்ணிக்கப்படும் ஏலக்காயில் ஏராளமான மருத்துவக் குணங்கள் அடங்கி உள்ளது.  சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

      ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும். ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி தீரும். நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம்.

      ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டாலே, தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம். சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது. குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

எலும்புகள் வலுபெற

    கால்சியத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவர்களுக்கு பால் தினசரி உணவுப்பழக்கத்தோடு ஒன்றாக இருக்கும். அப்படி நீங்கள் தினமும் பால் குடிக்கிறீர்கள் எனில் அதோடு ஏலக்காயும் தட்டிப் போட்டுக் குடியுங்கள். இதனால் கூடுதலான நன்மைகளைப் பெறலாம். பொதுவாகவே பாலில் உள்ள கால்சியம் உடலின் எலும்புகள் வலுவாக்க உதவுகிறது. மேலும் தசைகளையும் பலப்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், ஏலக்காயையும் சேர்ப்பதால் உள்ள கால்சியத்தின் அளவு மற்றும் அதன் நன்மைகளை இரட்டிப்பாக்கும். எனவே ஏலக்காய் பால் கொடுப்பது நல்லது.

செரிமான வலிமை தரும்

      ஏலக்காய் கலந்த பால் குடிப்பதால் செரிமானம் மேம்படும். ஃபைபர் ஊட்டச்சத்து நமது செரிமானத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, செரிமான அமைப்பை மேம்படுத்த ஏலக்காய் பால் குடிப்பது நல்லது. இது பல வகையான செரிமான நோய்களையும் நீக்குகிறது. அது ஏலக்காய் கலந்த பாலில் தாராளமாக உள்ளது.

வாய் புண்களுக்கு ஹோமியோபதி

    ஏலக்காய் வாய் மற்றும் வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். எனவே பால் மற்றும் ஏலக்காயை ஒன்றாகக் குடிப்பதால் வாய் புண்களைப் போக்க உதவும்.

இரத்த அழுத்தக் கட்டுப்பாடு

   உயர் இரத்த அழுத்தம் நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் இதய நோய்க்கான ஆபத்து இருக்கலாம். இதைத் தவிர்க்க பாலில் ஏலக்காய் கலந்து குடிப்பது நல்லது. பால் மற்றும் ஏலக்காய் இரண்டிலும் ஏராளமான மெக்னீசியம் உள்ளது. இந்த ஊட்டச்சத்து உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கவும் திறம்பட செயல்படுகிறது. எனவே தினமும் அருந்தும் பாலில் ஏலக்காயை தட்டிப்போட்டு நன்குக் கொதிக்க வைத்து ஒரு கிளாஸ் குடியுங்கள்.


Post a Comment

0 Comments