முதுகுவலி ஏற்பட என்ன காரணம் ? இதற்கு என்ன தீர்வு ?

    முதுகுவலி என்பது பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான பிரச்னையாகும். அதேசமயம் அது தவிர்க்கப்பட வேண்டிய விஷயமும் அல்ல. அப்படி உங்களுக்கு முதுகுவலி வர என்ன காரணம்? அதற்கு என்ன தீர்வு? என்று பார்க்கலாம்.

முதுகுவலி ஏற்பட என்ன காரணம் ?

      முதல் காரணம் உடல்நிலை சமநிலையின்மை..தவறான உடலமைப்பில் உட்காருதல், தூங்குதல் , நிற்பது போன்றவையாகும். அடுத்ததாக மன அழுத்தம், உடல் அழுத்தம், பதட்டம், சீரற்ற மனநிலை போன்றவையும் முதுகுவலிக்கு காரணங்களாக சொல்லப்படுகிறது.

    இந்த காரணங்கள் தவிர உங்களின் வாழ்க்கை முறையும் காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டிருப்பதும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதனால் அடி முதுகுவலி, நடு முதுகுவலி, மேல் முதுகுவலி என சந்திக்க நேரிடும். அதிக பளு தூக்குதல், இரு சக்கரம் அதிகம் ஓட்டுதல், திடீர் உடல் அசைவுகள் போன்றவையும் முதுவலிக்கு காரணங்கள்.

இதற்கு என்ன தீர்வு ?

   சமநிலையான ஊட்டச்சத்தான உணவு வகைகளை உட்கொள்ளுதல், குறிப்பாக கால்சியம், புரோட்டீன், வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் சீரான உடல் எடையைக் கடைபிடிப்பதும் அவசியம்.

    உட்காரும்போது, நடக்கும்போது, நிற்கும்போது என சீரான உடல் அமைப்பை பின்பற்றுதல் அவசியம். பெண்கள் அதிக ஹீல் கொண்ட காலணிகளை தவிர்ப்பது நல்லது. அதிக பளு கொண்ட பொருட்களை தூக்குவதை தவிர்க்கவும். உடற்பயிற்சி கூடத்திலும் பயிற்சியாளரின் பரிந்துரையில்லாமல் எந்த பளுவான பொருட்களை தூக்குவதும், அசைவுகளை முயற்சிப்பதையும் தவிருங்கள். வீட்டிலேயே பயிற்சி செய்தாலும் மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். ஸ்ட்ரெச்சஸ் அதிகம் செய்தல் முதுகுவலிக்கு இலகுவாக இருக்கும்.


Post a Comment

0 Comments