தூதுவளை இலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் என்ன பயன்?

   தூதுவளையிக் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது அதனால் இதை சாப்பிட்டால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுவடையும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி மற்றும் காய்ச்சல் வந்து விட்டால் அவர்கள் பெரும் அவதிப்படுவார்கள். தூதுவளை ரசம் வைத்து சாப்பிட்டால். சளி வந்த இடம் தெரியாமல் போய்விடும்.

     தூதுவளை இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து ,காயவைத்து , பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும் இதனைத் தொடர்ந்து மோரில் கலந்து சாப்பிட்டு வர இரத்த சிவப்பு அணுக்கள் விருத்தி அடைந்து, இரத்த சோகை நோய் தீர்ந்துவிடும்.

   தூதுவளை இலையை நன்கு பொடியாக்கி பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம், தலைவலி போன்றவை தீரும். தூதுவளை இலை பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்

Post a Comment

0 Comments